Cannabis seller arrested! Warned police superintendent!

Advertisment

கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் மற்றும் தவிட்டுப்பாளையம் காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அக்பர் உசேன் என்பவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. அதனையடுத்து அவரிடம் விசாரணை செய்ததில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நான்கு கிலோ கஞ்சாவை போலீசார் கண்டறிந்து அதனை பறிமுதல் செய்தனர். மேலும், அக்பர் உசேன் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்த போலீசார், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்பவர்கள், அரசு அனுமதி இன்றி மது விற்பனை செய்பவர்கள், வெளி மாநில மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.