Cannabis seller arrested

Advertisment

திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர், ராம்ஜி நகர் பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சுதர்ஷன்(28) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து அவரிடத்தில் சோதனை செய்தபோது, அவர் 1,100 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து அந்தக் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.