ADVERTISEMENT

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா தீ வைத்து அழிப்பு! 

05:44 PM Jun 25, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை பெருநகர பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,300 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் காவல்துறையினர் தீயிட்டு அழித்தனர்.

2.O என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செங்கல்பட்டை அடுத்துள்ள தென்மேல்பாக்கத்தில் மருத்துவக் கழிவுகளை எரியூட்டும் பகுதியில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப., வடக்கு மண்டல காவல்துறை இணை இயக்குநர் ரம்யா பாரதி ஆகியோர் முன்னிலையில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை அழித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப., "சென்னையில் கஞ்சா கடத்தல், பதுக்கல் தொடர்பான 404 வழக்குகளில் 639 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT