Advertisment

அதிமுக நிர்வாகி வீட்டில் இருந்து கஞ்சா பறிமுதல்; போலீசார் விசாரணை

cannabis seized from AIADMK member house

Advertisment

நாமக்கல் அருகே, அதிமுக நிர்வாகி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த இரண்டு கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி இச்சிக்குட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சேந்தமங்கலம் காவல்நிலையத்திற்குத்தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் காவலர்கள் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். சந்தேகத்தின் பேரில் அதிமுக கிளைச் செயலாளர் அர்ஜுனன் வீட்டில் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில், அவருடைய வீட்டில் இருந்து 2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. அர்ஜுனன் மகன் லோகேஷ்கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. காவல்துறையினர் சோதனை நடத்த வருவதை அறிந்த லோகேஷ்திடீரென்று தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருகின்றனர். அதிமுக நிர்வாகி வீட்டில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சேந்தமங்கலம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

admk Cannabis police
இதையும் படியுங்கள்
Subscribe