cannabis Prevention Awareness Rally vellore

Advertisment

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு காவல்துறையினர் அப்பகுதியில் போதைப்பொருளைத்தடுக்கும் வகையில் பேர்ணாம்பட்டு காவல் நிலையம் அருகிலிருந்து மாணவ மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்களைக் கொண்ட பேரணியை வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணாதுவக்கி வைத்து அங்கிருந்து முக்கிய சாலையின் வழியாகச் சென்று அம்பேத்கர் சிலை அருகே பேரணியை முடித்தனர்.

பின்பு தனியார் திருமண மண்டபத்தில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு பொருட்கள் மற்றும் பரிசுகளை வழங்கி விளையாட்டு வீரர்களையும் மாணவிகளையும் ஊக்கப்படுத்தினர். இந்தப் பேரணிபேர்ணாம்பட்டு பகுதியில் காவல்துறையினருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் நட்பு உறவு ஏற்படுத்தியது.