Cannabis incident in pudukottai

புதுக்கோட்டையில் கடந்த மாதம் 29 ந் தேதி நாமக்கல் மாவட்ட போலீசார் பொறிவைத்து பிடித்த, கஞ்சா மொத்த வியாபாரி அரிமளம் சீராடும்செல்வி கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த 180 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் ஆகியவற்றை பிடித்து புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துச் சென்றனர்.

Advertisment

அன்று ஆரோக்கியதாசுடன் வந்து தப்பி ஓடிய மணமேல்குடி தாலுகா கானாடு கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணு மகன் ரமேஷை(வயது 38), தேடி பிடித்து தொடர்ந்து நடத்திய விசாரணையில், கஞ்சா கடத்தல் சம்பவத்தில் சம்மந்தப்பட்டதாக அறந்தாங்கி எல்.என்.புரம் சின்ன அண்ணாநகர் ராமு மனைவி சகுந்தலா (வயது 32), அரிமளம் சீராடும்செல்வி கிராமத்தைச் சேர்ந்த ராசேந்திரன் மகன் ஆண்ட்ரூஸ் (வயது 22), மற்றும் 29 ந் தேதி கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட ஆரோக்கியதாஸ் மனைவி சிவகாமி (வயது 40), மகன் ஆனந்த் (வயது 22) ஆகியோரையும் காவல் ஆய்வாளர் கௌரி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Advertisment

Cannabis incident in pudukottai

மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமின்றி கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களைக் கைது செய்ய ரகசிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள் வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படலாம்.