Advertisment

கஞ்சா விற்பனையில் முன்விரோதம்... இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது!

cannabis  incident in chennai

Advertisment

கஞ்சா விற்பனை செய்வதிலிருந்த முன்விரோதம் மற்றும் போட்டி காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் நேற்று வெளியே சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் வீட்டு வாசலில் வைத்தே அஜீத்குமாரை வெட்டி கொலை செய்தது.

அந்த ஏரியாவில் கஞ்சா வியாபாரம் செய்துவந்த அஜித்குமாருக்கும், அந்த பகுதியிலிருந்த மற்ற கஞ்சா விற்பனை கும்பலுக்கும் கஞ்சா விற்பனை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு அஜித்குமார் தரப்பு மற்ற கஞ்சா கும்பல் தரப்பிடம் சண்டையிட்டதோடு மிரட்டலும் விட்டிருந்தது. இதனால் அஜித்குமாருக்கு எதிரான கும்பலைச் சேர்ந்த கார்த்திக், வினோத் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் அஜீத்குமாரை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. தற்பொழுது 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Cannabis Chennai incident police
இதையும் படியுங்கள்
Subscribe