திருச்சியில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை என்பது அதிகரித்து கொண்டே இருக்கிறது. போதைப்பொருட்களின் விற்பனை அதிகமாக நிலையில்இளம் ரவுடிகளின் அட்டகாசமும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

Advertisment

சமீபத்தில் காஜாப்பேட்டை பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும் சேர்ந்து மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் போதைப்பொருட்களின் ஆதிக்கம் காஜாப்பேட்டை பகுதியில் பெரிதும் காணப்படுகிறது.

Advertisment

 Cannabis gang arrested in Trichy

இதனால் எங்கள் பகுதி இளைஞர்கள் அனைவரும் போதைப்பழக்கத்திற்கு ஆளாகி கெட்டுப்போகின்றனர். இதுத்தொடர்பாக காவல்துறையிடம் பலமுறை இந்த பிரச்சனையை குறித்து புகார் சொல்லியும் அவர்கள் பெரிதாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, ஏனென்று கேட்டால் கஞ்சா விற்பனை செய்வது போன்ற வீடியோக்களை ஆதாரமாகக் கொண்டுவந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்கிறார்கள்.

 Cannabis gang arrested in Trichy

நாங்கள் புகார் சொன்னதற்காக பெரிய அளவில் உள்ள வழக்குகளை எண்ணிக்கைக்காக மட்டுமே கைது செய்கின்றனர். பிறகு மீண்டும் வெளியே வந்து கஞ்சா விற்பனையை நடத்த தொடங்கிவிடுகின்றனர். எனவே போதைப்பொருட்கள் விற்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து விற்பவர்கள் மீது புகார் அளித்தனர்.

Advertisment

இதையடுத்து நேற்று இரவு காஜாப்பேட்டை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒன்று அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்து செல்போனை திருட முயற்சித்துள்ளது. அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து, அடித்து கண்டித்து அனுப்பியுள்ளனர். பின்னர் இன்று காலை அக்கும்பல் திருட முயன்ற வீட்டிற்குள் புகுந்து வீட்டினுள் இருந்தவர்களை ஆயுதங்களால் தாக்கிவிட்டு சென்றது. இதில் படுகாயமடைந்த காமராஜ் என்பவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.

 Cannabis gang arrested in Trichy

மேலும் இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அனைவரும் இன்றுகாலை பெல்ஸ் ரவுண்டானா அருகே சாலை மறியலில் ஈடுப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள்மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தர்னாவில் ஈடுப்பட்டனர். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கரை இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் விசாரணை செய்தார் விசாரணையில் விமல்ராஜ் (21), விஜயபாபு(22), அலெக்ஸ் (21), ஜெஸ்வின்(21) ஆகியோர் இச்சம்பத்தில் ஈடுப்பட்டிருந்தது தெரிவந்தது. அதனடிப்படையில் அந்நான்கு பேரையும் பிடித்து விசாரித்ததில் கஞ்சா போதையில் இதுப்போன்ற செயல்களில் ஈடுப்பட்டது தெரியவந்தது. மேலும் இந்நான்கு பேர் மீதும் ஏற்கனவே பல்வேரு வழக்குகள் பாலக்கரை காவல்நிலையத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

திருச்சியில் போதைப்பொருட்களின் விற்பனை அதிகரிக்க குற்றச்செயலும் பெருகிக்கொண்டேதான் இருக்கிறது. இதனால் பெருமளவு பாதிக்கப்படுவது பள்ளி,கல்லூரி பயிலும் மாணவர்களே.

"தவறுகளை தட்டிக்கேட்க வேண்டிய காவல்துறையே தட்டிக்கொடுத்து செல்கிறது." என்கின்றனர் அப்பகுதி மக்கள்.