Cannabis dealer incident

திருச்சி ஏர்போர்ட் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவர் பெயிண்டராக பணியாற்றிவரும் நிலையில், தற்போது ஊரடங்கு காலத்தில் வேலை கிடைக்காததால் கஞ்சா விற்கும் தொழிலைத் தொடர்ந்து செய்துவந்துள்ளார். இந்நிலையில், இன்று (11.06.2021) பாரதிநகர் பின்புற பகுதியில் அருண் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் ஏர்போர்ட் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

Advertisment

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisment

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.இதனிடையே அவர்களுடைய முதற்கட்ட விசாரணையில், அருண் வெட்டப்படுவதற்கு முன்பு தனது நண்பர்களுடன் அதே பகுதியில் நின்றிருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பிரேம், ஜாஹிர், முபாரக் ஆகிய அவருடைய நண்பர்களைப் பிடித்து காவல்துறையினர் தற்போது விசாரணை செய்துவருகின்றனர்.