Cannabis dealer arrested for thuggery

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தேவா என்ற வாலிபர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவருவதாக காவல்துறைக்குத்தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரது கையில் வைத்திருந்த இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

Advertisment

கைது செய்யப்பட்ட தேவா மீது கோட்டை காவல் நிலையத்தில் 7 வழக்குகளும், கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் 17 வழக்குகளும் என மொத்தம் 25 வழக்குகள் அவர்மீது உள்ளதால், தற்போது காவல்துறையினர் அவரை குண்டர் சட்டத்தில் செய்துள்ளனர்.