படகில் கஞ்சா... யூடியூபர் வீட்டில் சுங்கத்துறை சோதனை!

Cannabis in the boat .. Customs check on YouTuber home!

கடந்த 28 ஆம் தேதி நாகப்பட்டினம்துறைமுகத்திலிருந்துஇலங்கைக்குப் படகு மூலம் கஞ்சா கடத்த இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல்கிடைத்ததையடுத்து, சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் நாகை துறைமுகம், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில்ஈடுபட்டுக்கண்காணித்து வந்தனர். அப்போது நாகை துறைமுகம் அருகே ஒரு படகில் கஞ்சா மூட்டைகளைஏற்றிக்கொண்டிருப்பதாகத்தகவல் கிடைக்க உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்துள்ளனர். அதிகாரிகள் வருவதை அறிந்த கடத்தல்காரர்கள்,கஞ்சாவைப்படகிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, படகைச் சுற்றி வளைத்த சுங்கத்துறை அதிகாரிகள்படகிலிருந்த280 கிலோ கஞ்சா அடங்கிய 10 மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர். அதோடு கடத்தல்காரர்கள் விட்டுச் சென்ற 4இருசக்கர வாகனங்கள், இரண்டு வலைகள், ஒருஐஸ்பெட்டி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகுஉள்ளிட்டவற்றைப்பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில்கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு, கடல்மற்றும் கடல் சார்ந்த உணவு உள்ளிட்டவற்றை மையமாக வைத்துயூ-டியூப்சேனல்நடத்தும்'நாகை மீனவன்'குடும்பத்தினருக்குச்சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Cannabis in the boat .. Customs check on YouTuber home!

இந்நிலையில்யூ-டியூப்சேனல்நடத்தி வந்த குணசீலன் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இன்றுஈச்சங்குப்பம்பகுதியில் உள்ள குணசீலன் அவரது நண்பர்கள் ரவி,சிவசந்திரன்ஆகியோர் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்தியபோலீசாருடன்சோதனை மேற்கொண்டனர்.

fisherman nagai raid
இதையும் படியுங்கள்
Subscribe