Advertisment

தமிழ்நாட்டின் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சி ஆகியவற்றுக்குக் கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று (22ஆம் தேதி) வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, 21 மாநகராட்சி அனைத்திலும் திமுக முன்னிலை வகித்துவருகிறது. 138 நகராட்சியில் திமுக கூட்டணி 128 நகராட்சிகளிலும், அதிமுக 6 நகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன. 489 பேரூராட்சிகளில், திமுக கூட்டணி 358 பேரூராட்சிகளிலும், அதிமுக 24 பேரூராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன. அதேபோல், ஒவ்வொரு வார்டிலும் வென்றவர்களுக்குத் தேர்தல் அலுவலர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

அதன்படி, சென்னை 174வது வார்டு திமுக வேட்பாளர் ராதிகா, 170வது வார்டு அதிமுக வேட்பாளர் கதிர் முருகன், 179 வார்டு திமுக வேட்பாளர் கயல்விழி, 172வது வார்டு திமுக வேட்பாளர் துரைராஜ் ஆகியோர் தங்கள் வெற்றி சான்றிதழைப் பெற்றனர். அதேபோல், பெரம்பூர் தொகுதி 35வது வார்டில் திமுகவின் கூட்டணிக் கட்சி சார்பில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஜீவன் வெற்றியை முன்னிட்டு தொண்டர்கள் அவரை தோலில் தூக்கி நடனமாடி வெற்றியைக் கொண்டாடினர்.