Published on 02/05/2021 | Edited on 02/05/2021

தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவானது கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. மே 2ஆம் தேதியான இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று காலை முதலே பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முகவர்கள், கட்சி வேட்பாளர்கள், காவல்துறையினர் மற்றும் அரசுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் என பலரும் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு வந்தனர். மேலும், வாக்கு எண்ணும் மையங்களுக்குள் நுழையும் ஒவ்வொருவருக்கும் முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்கியதோடு, உடல் வெப்பமும் சரிபார்க்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.