Advertisment

நடமாடும் நகைகடை போல் நாங்குநேரியில் பிரச்சாரத்தை துவங்கிய பனங்காட்டு படை வேட்பாளர்

இடைத்தேர்தல் நடக்கயிருக்கும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் 23-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிகிறது. இதில் நாங்குனேரியில் போட்டியிடும் முக்கிய பிரதான கட்சிகளான அதிமுக வேட்பாளரை இன்று (25-ம் தேதி) அறிவித்தது. ஆனால்காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

Advertisment

Candidate who started the campaign in Nanguneri like as a moving jewelery

இந்த நிலையில் முதல் முறையாக சுயேட்சையாக தேர்தல் களம் காணும் பனங்காட்டு படை முதலில் வேட்பாளரை அறிவித்ததோடு மட்டுமல்லாமல் முதலில் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார் அதன் வேட்பாளர் ஹரிநாடார். பேருந்து நிலையம் மற்றும் கடை விதிகளில் நடந்து சென்று வாக்கு கேட்கும் வேட்பாளர் ஹரிநாடார்; நடமாடும் தங்க நகை கடை போல் கழுத்து மற்றும் கைகளில் தங்க நகைகளை வாரி அணிந்து கொண்டு அவர் வாக்கு கேட்பதை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்கிறார்கள்.

Advertisment

பள்ளி மாணவ மாணவிகளிடம் ஹரிநாடார் கைகூப்பி வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சொல்லி எனக்கு வாக்களிக்க சொல்லுங்கள் என கேட்டு கொண்டார். அதேபோல் என்னை ஜெயிக்க வைத்தால் பின் தங்கியிருக்கும் நாங்குநேரியை முன்னுக்கு கொண்டுவருவேன் என இப்போதே வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்.

election campaign byelection nanguneri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe