Advertisment

வேட்பாளர் மறைவு... மேலுமொரு இடத்தில் தேர்தல் ரத்து!

publive-image

Advertisment

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தேர்வு நிலைப் பேரூராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலர் இன்று (15/02/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022- ல் வத்திராயிருப்பு தேர்வு நிலைப் பேரூராட்சி வார்டு எண்.2- க்கான உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் படிவம்- ன்படி பதிவு பெற்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் வார்டு எண். 02- க்கு பேரூராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திரு.க.முத்தையா தபெ கருப்பையா (வயது 43) கதவு எண் 184/136, மேலத் தெரு, வத்திராயிருப்பு என்பவர் 14/02/2022 அன்று அதிகாலை 01.10 மணிக்கு இயற்கை எய்திவிட்டார் என்று பதிவாளர் (பிறப்புமற்றும் இறப்பு) அரசு மருத்துமனை வத்திராயிருப்பு அவர்களால் இறப்பு சான்று வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மேற்கண்ட வார்டு எண்.02- க்கான பேரூராட்சி மன்ற உறுப்பினர் தேர்தல் விதி 34 (1) (C) தமிழ்நாடு நகராட்சிகள் பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிகளின்படி வத்திராயிருப்பு 2006 தேர்வுநிலைப் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரால் ஒத்திவைக்கப்படுகிறது". இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe