/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Chennai_High_Court_26.jpg)
வேட்பாளர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக்க்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
மனுதாரர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "வெற்றியை எதிர்த்து 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்கு தொடர கட்சிகள் தந்த ஆவணம் அவசியம். எனவே, வரும் ஜூன் 15- ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கோரியுள்ளார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)