Advertisment

ரசாயன மாற்றத்தால் கேன்சர் வரும் - ஆராய்ச்சி மாநாட்டில் சுகாதாரத்துறை செயலர் பேச்சு!!

விஐடியில் தொடங்கிய இந்திய மரபணுமாற்றக் காரணி சங்கத்தின் 43வதுஆண்டு மாநாடு மற்றும் மனித மரபணுமாற்றலில் சுற்றுசூழல் தாக்கம் என்பது பற்றிய 3 நாள் சர்வதேச கருத்தரங்கினை தமிழ்நாடு அரசின்சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

Advertisment

இந்திய மரபணு மாற்றக் காரணிசங்கத்தின் 43வது ஆண்டு மாநாடு விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. விஐடியில் இச்சங்கத்தின் முதல்மாநாடு 2011ல்நடத்தப்பட்டது. தற்போது விஐடியில்இரண்டாவதாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதையொட்டி மரபணுமாற்றலில் சுற்றுசூழல் தாக்கங்கள் என்பது பற்றிய கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 நாள் நடைபெறும் இக்கருத்தரங்கை விஐடியில் உயிரி அறிவியல் தொழில்நுட்ப பள்ளி ஏற்பாடு செய்துள்ளது.

Advertisment

health minister

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

கருத்தரங்கம் தொடக்க விழா நேற்றுகாலை விஐடியில் உள்ள டாக்டர் சென்னா ரெட்டி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சி வருகை தந்தவர்களை விஐடி உயிரி அறிவியல் தொழில்நுட்ப பள்ளி டீன் டாக்டர் வி.பிரகாசம் வரவேற்றார். கருத்தரங்கின் நோக்கம் பற்றி அதன் அமைப்பாளர்களில் ஒருவரான உருகுவே நாட்டின் டி லா ரிபப்ளிகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் வில்நர் மார்டினஸ் லோபஸ் விளக்கி கூறினார்.

கருத்தரங்கு தொடக்க நிகழ்விற்கு விஐடி செயல் இயக்குநர் டாக்டர் சந்தியா பென்டாரெட்டி தலைமை வகித்து பேசியதாவது, மரபணு மாற்றத்தில் சூற்றுசூழல்தாக்கம் பற்றிய இந்த சர்வதேசகருத்தரங்கில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், பொலிவியா, ஆஸ்திரியா, தைவான், உருகுவே ,சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடாபோர்ச்சுக்கல், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், மரபணு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பலர் பங்கேற்றுள்ளனர். மரபணு மாற்ற, கேன்சர் தெரபி உள்ளிட்டவைகள் சம்மந்தமாக 50 ஆராய்ச்சி கட்டுரைகள் ஆய்வுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. விஐடியில் உள்ள உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரி அறிவியல்தொழில்நுட்பம் சம்மந்தமானஆய்வகங்களில் மாற்றுமருத்துவத்திற்கான ஆராய்ச்சிகள்நடத்தப்பட்டு வருகின்றன. நோய்தாக்குதலிலிருந்து மக்களை காப்பாற்றஅறிவியல் விஞ்ஞானிகளின் பங்களிப்புபாராட்டதக்கது.

குருடாயில், பிளாஸ்டிக், ரசாயணம் உள்ளிட்ட பல்வேறு ரசாயனதொழிற்சாலைகளின் மாசால் கேன்சர் போன்ற நோய்கள் மக்களை பாதிக்கும் நிலை உள்ளது. இதனை தடுக்க வேண்டுமானால் மாசு ஏற்படாமலிருக்க சூற்று சூழல் பராமரிக்கப்படவேண்டியுள்ளது. இதனை மரபணுமாற்று சங்கம் மேற்கொண்டு வருவது பாராட்டதக்கது என்றார்.

இதில் தமிழ்நாடு சுகாதார துறையின்முதன்மைச் செயலாளர் டாக்டர்ஜெ.ராதாகிருஷ்ணன் சிறப்புவிருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்துபேசியதாவது.வேலூரில் இயங்கி வரும் சி.எம்.சி.மருத்தவமனை, விஐடிபல்கலைக்கழகம் மற்றும் வேலூர் அரசுமருத்துவக்கல்லூரி ஆகியவை அறிவியல் கல்வியின் மூலம் மக்களுக்கு சேவை செய்து வருகின்றன. இவைகள் ஆராய்ச்சிகளின் மூலமாக அறிவு மாற்றத்தை ஏற்படுத்திவருகின்றன. முன்பெல்லாம் ஆராய்ச்சிபற்றிய கருத்துக்களை முடிவுகளை புத்தகத்தில் பதிவு செய்து அனுப்பும்நிலை இருந்தது. ஆனால் இன்று.மெயில் பேஸ்புக் உள்ளிட்டவைகள் மூலமாக உடனடியாக அனுப்பும் நிலைஉள்ளது.

health

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

விஐடியில் நடைபெறும் இக்கருத்தரங்கம் மிக முக்கியமான கருத்தரங்கம் ஆகும். ரசாயன மாசால் மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் கேன்சர் போன்ற நோய்கள் உருவாக காரணிகளாக உள்ளன. கேன்சர் நோய் மரபு வழியாகவும் ரசாயன மாசுகளாலும் உண்டாகும் அபாயம் உள்ளது. மாசுவால்கொடிய நோய்கள் பாதிப்புக்களை தடுக்க சுற்றுசூழல் பராமரிப்பு பற்றியும் கேன்சர் வருவதை தடுக்க மரபணுமாற்று முறை, சிகிச்சை முறை ஆகியவை சம்மந்தமான பணிகளில் மரபணு மாற்றக் காரணி சங்கம் சிறப்பாக பணியாற்றி வருவது பாராட்டதக்கது. மாற்று மருத்துவ ஆராய்ச்சிமுறைகள் நோய் பரவலைதடுக்கவும் சிகிச்சை அளிக்கவும் உதவும். ஸ்டெம்ப் செல் மூலம் பல்வேறுநோய்களை தீர்க்க முடியும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவசேவை சம்மந்தமாக அனைத்து வசதிகளும் உள்ளன. எல்லோரும் சிகிச்சைக்காக பெரியமருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்துகிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கு சென்று சிகிச்சைபெறலாம். அம்மையங்களில்தடுப்பூசிகள் மருந்துகள் உள்ளிட்டவைஇருப்புவைக்கப்பட்டுள்ளன.

நோய் பரவாமல் இருப்பது மட்டுமின்றிநோய் வராமல் இருக்கும் வகையில்சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் மக்கள், தங்களை உருவாக்கி கொள்ளவேண்டும். தடுப்பு ஊசிகள் போலியோசொட்டு மருந்து ஆகியவற்றை ஆர்வத்துடன் போட்டுக் கொள்ளவேண்டும். மூன்று நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கில் மரபணு மாற்றலில் சுற்றுசூழல் வழிமுறைகளை அறிஞர்கள் பரிமாறிக் கொண்டு ஆராய வேண்டும் என்றார் .

முன்னதாக நிகழ்ச்சியில் கருத்தரங்கின் சிறப்பு மலரினை விஐடி செயல்இயக்கநர் டாக்டர் சந்தியா பென்டாரெட்டிவெளியிட்டார்.

அதனை சிறப்பு விருந்தினர் அரசு முதன்மைச்செயலாளர் டாக்டர்ஜெ.ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். இதில் இந்திய மரபணுமாற்று காரணி சங்கத்தின் தலைவர்டாக்டர் கே.பி சைனஸ் கைவர்ஜினோமிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்மற்றும் தலைமை செயல் அலுவலர் அபிலேஷ் எம்.குணசேகர் ஆகியோர்பங்கேற்று பேசினர். முடிவில்கருத்தரங்கு அமைப்பாளர் பேராசிரியைடாக்டர் ராதாசரஸ்வதி நன்றி கூறினார்.

Medical Radhakrishnan vit
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe