Advertisment

புறநகர் மின்சார ரயில்கள் ரத்து; பயணிகள் அவதி

 Cancellation of suburban electric trains; Passengers suffer

தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரையின் இரு மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயில் சேவைகள் கடந்த இரண்டு நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரண்டு நாட்களுக்கு ரயில் சேவை இருக்காது என தென்னக ரயில்வே நேற்றே அறிவித்திருந்தது.

Advertisment

தாம்பரத்திலிருந்து கடற்கரை இடையே இரு மார்க்கத்திலும் இன்றும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் சொந்த வேலைக்காக வெளியே செல்லும் மக்கள் தவித்து வருகின்றனர். இன்று காந்தி ஜெயந்தி விடுமுறை தினம் என்பதால் சொந்த தேவைகளுக்காகவும், மருத்துவமனை உள்ளிட்ட தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள் ரயில் வசதி இல்லாததால் பேருந்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

Advertisment

thamparam Chennai Train
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe