Advertisment

முறைகேடான கூட்டுறவுத் தேர்தலை ரத்துசெய்க - புதுக்கோட்டையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

cpm

Advertisment

கூட்டுறவு சங்கங்களில் அதிமுகவினரே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும் அராஜக நடவடிக்கையைக் கண்டித்தும் உடனடியாக தேர்தலை ரத்துசெய்ய வலியுறுத்தியும் புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை திலகர்திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் சி.அடைக்கலசாமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ப.சண்முகம், செயலாளர் கே.முகமதலிஜின்னா, துணைத் செயலாளர் சி.மாரிக்கண்ணு, ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.விக்கி உள்ளிட்டோர் பேசினர்.

மாவட்டம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுகவினரே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும் அராஜக நடவடிக்கையைக் கண்டிப்பதோடு, உடனடியாக தேர்தலை ரத்துசெய்ய வேண்டும். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். டெல்லா உள்ளிட்ட 5 மாவட்டங்களை மத்திய அரசு பெட்ரோலிய மண்டலமாக அறிவிக்கப்பட்டதை திரும்பப்பெற வேண்டும். ஒருங்கிணைந்த வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.

Cancellation corruption cpm Election Pudukottai
இதையும் படியுங்கள்
Subscribe