Advertisment

ஓபிஎஸ், ஓபிஆர் மீதான வழக்குகள் ரத்து

Cancellation of cases against OPS, OPR

Advertisment

ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஓபிஆர் மீதான வழக்குகளைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

2021 சட்டப்பேரவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வமும், 2019 மக்களவைத் தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத்தும் தவறான தகவல்களை வேட்புமனுவில் தெரிவித்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. மிலானி என்பவர் அளித்தபுகாரில் வழக்கைப் பதிவு செய்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பும், அவரது மகன் தரப்பும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்கள் இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிமன்றத்தில் ஓபிஎஸ், ஓபிஆர் தரப்பில், 'எதிர் மனுதாரர் (பிரைவேட் கம்பெனி) தனியாளாகப் புகார் மட்டும் அளித்திருக்கிறார். அதற்காக இருக்கக்கூடிய பிரமாணப் பத்திரத்தைத்தாக்கல் செய்யவில்லை. தேர்தல் வேட்புமனுவில் உண்மையான தகவல்கள் கொடுக்கப்பட்டதால்தான் வேட்புமனு ஏற்கப்பட்டது. இல்லையென்றால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருக்கும். எனவே அதனடிப்படையில் இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்ற வாதம் வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'புகார் மனுவிற்கு ஆதாரங்கள் இல்லாத மனுவை ஏற்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதால், அதனை ஏற்று ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ரவீந்திரநாத்துக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட்ட வழக்குகளை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

highcourt
இதையும் படியுங்கள்
Subscribe