மின்கட்டணத்தை ரத்து செய்க- ஸ்டாலின் வலியுறுத்தல்

பத்திரிகையாளர்களுக்கு கரோனா வைரஸ் சோதனை செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Cancel the electricity bill - Stalin's insistence

பத்திரிகையாளர்களுக்கு போர்க்கால அடிப்படையில் கரோனாசோதனை செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பத்திரிகையாளர் பலருக்குகரோனா பாதித்திருப்பது வேதனை தருகிறது. அரசு உள்ளிட்ட அனைவருமே ஊரடங்கு முடியும் வரை பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்ய வேண்டும்.

அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.அரசே இலவசமாக உணவை வழங்க வேண்டும். சுங்கச்சாவடிகளை திறந்து சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது மனித நேயமற்ற செயல். சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு உடனே நிறுத்தி வைக்க வேண்டும்.அதேபோல் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.ரேஷனில் அரிசி அட்டைவைத்துள்ளவர்களுக்கு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

coronavirus stalin
இதையும் படியுங்கள்
Subscribe