Advertisment

பெண்ணின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகள், ரொக்கப்பணத்தை பறித்து சென்ற திருடர்கள்! 

வேலூர் மாவட்டம், ஆம்பூர் இந்திரா நகர் மூன்றாவது தெருவில் வசிப்பவர் சீனுவாசன். இவரது மனைவி நிர்மலா. சீனிவாசன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். நிர்மலா வீட்டிலிருந்த 30 சரவன் தங்க நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கப்பணத்தை ஒரு பையில் வைத்துகொண்டு இருசக்கர வாகனத்தில் ஆம்பூர் பஜாரில் உள்ள கனரா வங்கிக்கு லாக்கரில் வைக்க செப்டம்பர் 20 ந்தேதி மதியம் எடுத்து சென்றார்.

Advertisment

canara bank entry in one women thief take gold and money peoples shock

வங்கி அருகே சென்று வண்டியை நிறுத்திவிட்டு வண்டியில் இருந்து நகை மற்றும் பணம் இருந்த பையை எடுத்துள்ளார். அங்கே இருந்த சிலர் அவரது வண்டியின் கீழே 20 மற்றும் 10 ரூபாய் நோட்டுக்களை சிதறி கிடப்பதாக கூறி அவரது கவனத்தை திசை திருப்பியுள்ளார்கள். அவர் அந்த தாள்களை பார்த்தபோது, இருசக்கர வாகனத்தில் இருந்த நகை மற்றும் பணப்பையை எடுத்துகொண்டு ஓடினர், அதைபார்த்து அதிர்ச்சியாகி கத்த மற்றவர்கள் சுதாகரிப்பதற்குள் தப்பி ஓடிவிட்டனர்.

இதுப்பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வந்த காவல்துறையினர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதோடு, வங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து நிர்மலா ஆம்பூர் நகர காவல்துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வங்கி லாக்கரில் வைக்க கொண்டு செல்லப்பட்ட பணம், நகைகள் கொள்ளையடித்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police peoples GOLD AND MONEY thief
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe