Advertisment

போர் தந்திரத்தை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தலாமா? -வாய்ச்சொல் வீரர் என மோடியை சாடுகிறார் பொன்ராஜ்!

Can war tactics be revealed in parliament? -Ponraj criticizes Modi

“பிரதமர் சொன்னது உண்மையா, பொய்யா?” என்று கேள்வி எழுப்புகிறார், அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சியின் தலைமை வழிகாட்டியான பொன்ராஜ். இந்தியா – சீனா விவகாரத்தில், தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அவரது ஆதங்கம் இதோ,

Advertisment

“இந்திய-சீன படைகளை, கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் சீனா ஊடுருவிய இடத்திலிருந்து விலக்கிக்கொள்ள நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில், 30 ஜூன் 2020 அன்று ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்திய இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் அவர்களுக்கும், தென் சீன சின்ஜியாங் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் லியூ லின் அவர்களுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், LAC எல்லை கோட்டில் இருந்து இரு படைகளும் 3 km இடைப்பகுதியில் யாரும் வரக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவின்படி, இந்தியா இதுவரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த PP-14 என்ற LAC இடத்தில் இருந்து,சீனா-இந்திய பகுதியில் 1 கிமீ ஊடுருவி,மாற்று எல்லைக் கோட்டை போட்டுள்ளது. அதன்மூலம், இந்தியாவின் முன்னிலைப் படையின் டென்ட் LAC-ல் இருந்து 2.4 கிமீதொலைவிலும், சீனா ஊடுருவி போட்ட மாற்று எல்லைக்கோட்டில் இருந்து 1.4 கிமீ தொலைவில் சீனாவின் முன்னிலைப் படையும் இருக்கும் என்று முடிவாகியுள்ளது. எனவே, இந்தியா 1 கிமீ இந்திய பகுதியை சீனாவிடம் விட்டு கொடுத்து இருக்கிறது.

இரண்டாவது,PP-15 பகுதியில் சீனா-இந்திய பகுதியில்,3 கிமீ ஊடுருவி ரோடு போட்டு இருக்கிறது, அதில்எந்த மாற்றமும் இல்லை. இங்கு சீனாவின் 1000 இராணுவ வீரர்களை சம அளவில் எதிர்த்து இந்திய இராணுவம் களத்தில் இருக்கிறது.

ஹாட்ஸ்பிரிங் பகுதியில் 2-3 கிமீ ஊடுருவி, 1500 சீன இராணுவ வீரர்களை கோக்ரா ஹைட்ஸ் PP-17A என்ற பகுதியில், சீனா நிலை நிறுத்தி இருக்கிறது. அந்த இடத்தில் நமது இந்திய இராணுவம் அவர்களை எதிர்த்து நிலை நிறுத்தி இருக்கிறது.

பாங்கோங் டிஸோ ஏரி பகுதியில், FINGER-8 மலைத் தொடர் வரை, இதுவரையிலும், இந்திய இராணுவம் பல ஆண்டுகளாக,தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இப்போது,சீனா இராணுவம் 8 கிமீ ஊடுருவி FINGER-4 வரை சீனாவின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது. இப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சீனா இராணுவம் இந்தியாவை FINGURE-2 பின்பு சென்றால்தான், FINGER-8 லிருந்து வாபஸ் வாங்குவோம் என்று சொல்லி, பேச்சு வார்த்தையில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

சீனா இப்போது 3 பகுதியிலும் ஊடுருவி,இந்தியா இதுவரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பகுதிகளில் இருந்து பின்வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட சீனாவின் ஊடுருவல் தொடருமானால், 3,488 கிமீ LAC எல்லை முழுவதும் பாகிஸ்தான் LOC-ஐ போல,தொடர் கண்காணிப்பை இந்திய இராணுவம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும், இராணுவத்திற்குதேவையான கட்டமைப்பு, இராணுவ பலம் அதிகரித்தல் போன்றவையால்,ஏற்கனவே இந்தியாவின் பட்ஜெட்டில் கால் பகுதி இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது, இது மென்மேலும் அதிகரிக்கும் என்று இராணுவ உத்தி கணிப்பாளர்கள் கணித்திருக்கிறார்கள்.

இந்தியாவின் பொருளாதாரம் ஏற்கனவே சரிந்திருந்திருக்கும் நிலையில், கரோனா தாக்கத்தில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியில் இந்தசூழலை எப்படி மோடி அரசு சமாளிக்கப் போகிறது?

MODI

பிரதமர் மோடி அரசு,MSME SECTOR- க்கு 3 லட்சம் கோடி கடனுக்கு ஈடாக உத்தரவாதம் கொடுத்தும், பிரதமரின் பேச்சை அல்ல, மத்திய அரசின் உத்தரவாதத்தையே, இந்திய வங்கிகள் நம்ப மறுக்கின்றன. அவர் உத்தரவாதத்தை ஏற்கவில்லை. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, அவர்களுக்கு வருமானம் வரும் நிலத்தை உத்தரவாதம் கொடுத்து,அடமானப் பத்திரம் கொடுத்தால்தான் கடன் கொடுப்போம் என்று சொல்லும் நிலையில் இருக்கிறது மத்தியில் உள்ள மோடி ஆட்சி. பிரதமரை வங்கிகளே மதிக்கவில்லை எனும் போது, மக்கள் பிரதமரின் பேச்சை எப்படி நம்ப முடியும்?

மக்கள் நம்பினால் என்ன, நம்பாவிட்டால் என்ன, நாம் சொல்வதுதான் உண்மை என்று பிரதமர், எந்த நாடும் இந்திய எல்லையில் ஊடுருவவில்லை, எந்த நாடும் நம் படை இருந்த இடத்தைபிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால்,நமது இராணுவம் பேச்சுவார்த்தை நடத்தியும்அவர்கள் பின்வாங்கவில்லை.

கல்வான் பள்ளத்தாக்கைபிடிப்போம், LAC-ஐ ஆக்கிரமித்து இந்தியாவில் ஊடுருவுவோம் என்று சீன பாராளுமன்றத்தில் சொல்லிவிட்டு வந்தா, சீனா ஆக்கிரமித்தது?

போர் வியூகத்தை ரகசியமாக வைப்பது தான் ஒரு நாட்டின் வல்லமை, தலைமைப் பண்பல்லவா?

1968-ல், சீனா ஆக்கிரமித்த அக்சாய் சின்னை பிடிப்போம், POK-ஐ பிடிப்போம் என்ற போர் தந்திரத்தை, வியூகத்தை வெளிப்படையாக யாராவது பாராளுமன்றத்தில் சொல்வார்களா?

இன்றைக்கு, இந்த வாய்சொல் வீரர்களின் வெட்டிப் பேச்சால், நம் இந்திய இராணுவம் சீனாவோடு கடுமையாகப் பேச்சுவார்த்தை நடத்தி, போரை தவிர்ப்பதற்காக 3 இடங்களில் சீனா இராணுவம் ஊடுருவிய இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

முதலில் பசி, அப்புறம் pandemic. கடைசியில் தான் பகைமாட்சி

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு. - திருக்குறள் 734

மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.” -இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், வெ.பொன்ராஜ்.

china corona virus India modi ponraj
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe