நடிகர் சங்க தேர்தலின் வாக்குகளை எண்ணலாமா? அல்லது மறுதேர்தல் நடத்தலாமா? -பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

highcourt chennai

நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றுஒன்றரை ஆண்டுகள்கடந்தும்வாக்குகள் எண்ணப்படாதநிலையில் இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் மறு தேர்தல் நடத்தலாமா? அல்லதுவாக்கைஎண்ணலாமா?என்பதை வழக்கின் மனுதாரர்களின் இருதரப்பும் பேசி முடிவெடுத்து நீதிமன்றத்திற்குதெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு தேர்தலுக்கு 30 லட்சம் செலவானது. எனவே மறுதேர்தல் சாத்தியமற்றது எனக் கூறியவிஷால் தரப்பு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில்பதிவானவாக்குகளை எண்ணஉத்தரவிட வேண்டும் என வாதிட்டது.தேர்தலை தனி நீதிபதி ரத்து செய்துள்ளதால் நியாயமாக மறு தேர்தல் நடத்த தயார் என ஏழுமலை தரப்பு வாதம் செய்தது.

இந்நிலையில்நடிகர் சங்கதிற்கு மறுதேர்தல் நடத்துவதா? அல்லதுநடத்தப்பட்ட தேர்தலில் பதிவானவாக்குகளை எண்ணுவதா? என நடிகர் விஷால் தரப்பும்,ஏழுமலை தரப்பும் செப்டம்பர் 24 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

highcourt south actors association vishal
இதையும் படியுங்கள்
Subscribe