ஜனநாயக ரீதியாக போராடக் கூடாதா? அரசு கைது செய்கிறதே! என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பது மிகவும் கவலைக்கிடமானது. நிலையை அறிந்து ஆய்வை குறை கூறாமல் பொறுப்புகளை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அன்று இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனத்தை அறிவித்து செயல்படுத்தினார். இன்றோ மத்திய அரசு அறிவிக்காமலே அவசர நிலை பிரகடனத்தை செயல்படுத்தி வருகிறது.
ஸ்விஸ் வங்கியில் இந்தியாவைச் சேர்ந்தவர்களின் பணம் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தகவல் வருகிறது. ஜனநாயக ரீதியில் போராடக் கூடாதா? அரசு கைது செய்கிறதே! தமிழக அரசின் மோசமான செயல்பாடுகளைக் கண்டித்து ஜூலை 5ம் தேதி சென்னை திருவள்ளுர் கோட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம்.
மக்களின் நேரடி தொடர்பில் உள்ள உள்ளாட்சித் தேர்தலை காரணமின்றி ஒத்தி வைக்கும் நடவடிக்கையை கைவிட்டு, உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)