மருத்துவக் கல்லூரிகளில் தலா 2 இடங்களை அதிகரிக்க முடியுமா? - உயர்நீதிமன்றம் கேள்வி!

 Can 2 seats each be increased in medical colleges? -highCourt Question!

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டண அறிவிப்பை முன்தேதியிட்டு அமல்படுத்தக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கடலூர் மாணவிகள்சார்பில்வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா இரண்டு இடங்களைஅதிகரிக்க முடியமா? எனச் சென்னைஉயர்நீதிமன்றம், தேசியமருத்துவ ஆணையத்திடம் கேள்விஎழுப்பியுள்ளது.

அப்படி, தலா 2 மருத்துவ இடங்களைஅதிகரித்தால், 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் இடம்பெற்றுகட்டணம்செலுத்தமுடியாமல் தவிக்கும், 51 பேருக்குபடிக்க வாய்ப்பு கிடைக்கும். அகில இந்தியஒதுக்கீட்டில், கலந்தாய்வு முடிவில், 7.5 சதவிகித ஒதுக்கீட்டின் கீழ், 12 இடங்கள்கிடைக்கும். இதனால் காத்திருப்போர் பட்டியலில்உள்ள மாணவர்களுக்கு மருத்துவஇடங்கள் கிடைப்பதோடு, மாணவர்களுக்கு புதியஉத்வேகமும்கிடைக்கும்எனச் சென்னைஉயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்கள் மீதான இந்தச் சமூகத்தின்பார்வையைமாற்ற, இது ஒரு நல்வாய்ப்பாக அமையும்என நீதிமன்றம் கருத்துத் தெரிவித்து, இது தொடர்பாகதேசியமருத்துவ ஆணையம்டிசம்பர் 17-ஆம் தேதி, பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கைஒத்திவைத்தது.

highcourt Medical Student tn govt schools
இதையும் படியுங்கள்
Subscribe