Advertisment

பிரசார நேரம் நீட்டிப்பு! தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவிப்பு!

Campaign Time Extension! Election official Satyaprada's announcement!

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கவிருக்கிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடாகி வருகிறது. தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 4 - ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பொதுவாக 48 மணி நேரத்துக்கு முன்பாக, தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்து விடும். அந்த வகையில், 4-ந்தேதி மாலை 5 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்ய அவகாசம் இருக்கிறது. இம்முறை அந்த அவகாசம் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹூ பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான கடைசி பிரச்சார நாளான ஏப்ரல் 4-ம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் அனுமதிக்கப்படுகிறது. அதன்படி, அரசியல் கட்சியினர் மாலை 7 மணி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்படும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் முடிந்ததும் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும்" என்றார்.

Advertisment

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் பகல் 12 மணி முதல் 4 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்வதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் பிரச்சாரநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

election campaign sathya pradha sahu tn assembly election 2021
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe