Published on 14/03/2022 | Edited on 14/03/2022

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசைக் கண்டித்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் திருச்சி மேல சிந்தாமணியில் தற்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1000க்கும் அதிகமான அமமுகவினர் கலந்து கொண்டு வருகின்றனர்.
காவிரி மேகதாதுவில் அணை கட்டும் போக்கை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். திமுக அரசு இதில் முழுமையாக கவனம் செலுத்தி இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில், விவசாயச் சங்கங்களின் சார்பில் பி.ஆர் பாண்டியன், அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.