Cake cutting celebration by Pattakathiyal.. Four people arrested

Advertisment

அண்மைகாலமாக பொதுவெளியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் கலாச்சாரமானது அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். அதனைத் தொடர்ந்து போலீசார் இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்வர்.

சமீபமாக இதுபோன்று சம்பவங்கள் பெரிய அளவில் நிகழாத வண்ணம் இருந்த நிலையில், கோவையில் இப்படி ஒரு சம்பவம் மீண்டும்நிகழ்ந்துள்ளது. கோவை இடையர் வீதியில் பேக்கரி முன்பு கூடிய இளைஞர் கும்பல் ஒன்று பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. போலீசார் நடத்திய விசாரணையில் தினேஷ் குமார், அரவிந்த் குமார், பார்த்திபன் உள்ளிட்ட நண்பர்களுடன் சேர்ந்து அசோக்குமார் என்பவர் பிறந்தநாள் கொண்டாடியது தெரியவந்தது. நால்வரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே அடிதடி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படும் நிலையில் நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.