banthh-puduvai

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்திறக்கு எதிர்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதில் தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த போராட்டத்தில் வணிகர் சங்கங்களின் ஆதரவு அறிவிப்பு காரணமாக பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு காணப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் தமிழகத்தை கண்டித்து கர்நாடகாவிலும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், தமிழக, கர்நாடக மாநில எல்லையில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகளும் அதே போன்று சத்தியமங்கலத்திற்கு இயக்கப்படும் கர்நாடகா மாநில அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை.

Advertisment

இன்று முழு அடைப்பையொட்டி தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே போல் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் அத்திப்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ளன.

சென்னை, புறநகர் பகுதிகளில் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கிவருகின்றன. இதனால் சென்னையில் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பில்லை என கூறப்படுகிறது. அரசியல் கட்சிகள் முற்றும் வணிக சங்கங்கள் நடத்தி வரும் முழு அடைப்பு காரணமாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisment