சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மற்றும் ஆளுநர் உரை குறித்து ஆலோசிக்கப்படும் எனத்தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின்வரும் 28 ஆம் தேதிவெளிநாடுகளுக்குச் செல்லவுள்ள நிலையில், தமிழகத்தில் சில தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்குப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. அதற்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும்மற்றும் துறை அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.