Skip to main content

முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

 

Cabinet meeting today chaired Chief Minister mk stalin

 

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 

 

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. வரும் 20 ஆம் தேதி தமிழகத்தின் இந்தாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ள நிலையில் இன்று கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்படும் எனக் கூறப்படுகிறது.  

 

மேலும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமை தொகை வழக்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பும் இந்தாண்டின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதனால் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது போன்ற பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. இன்னும் பல முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !