பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகள் பேரணி! கலந்துகொள்ளாத அதிமுக...

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஜனநாயக அமைப்புகள், மாணவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியிலும் நேற்று காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், பல்வேறு அரசியல் சமூக இயக்கங்கள் சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் மாபெரும் ஒற்றுமைப் பேரணி நடைபெற்றது.

caa supporting rally in pondicherry

இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரி பாரதி ஜனதா கட்சி சார்பில் ஆதரவு பேரணி நடைபெற்றது.

பா.ஜ.க மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி தலைமை தபால் நிலையம் வந்தடைந்தது. அங்கு தலைவர்கள், நிர்வாகிகள் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விளக்கவுரை ஆற்றினர்.

பாஜக கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறும் இந்த பேரணியில் அனைத்து கூட்டணி கட்சிகளும் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பா.ம.க மட்டுமே கலந்து கொண்டது. அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் இந்த பேரணியில் பங்கேற்கவில்லை

caa Pondicherry
இதையும் படியுங்கள்
Subscribe