மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்ட போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்தநிலையில் நாகையில் பாஜகவினர் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நேற்று (28/02/2020) பேரணியில் ஈடுபட்டனர். அப்போது குடியுரிமை சட்டத்தை ஆதரித்து எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி பாஜகவினர் கோஷங்களை எழுப்பினர். நாகை நீலா தெற்கு வீதியில் இருந்து துவங்கிய பேரணி அவுரி திடலை வந்தது. அங்கு பாஜக மற்றும் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர்.

Advertisment

தஞ்சை, திருவாரூர் நாகை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் பேரணியில் கலந்துகொண்டனர்.