Advertisment

குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சென்னை திரு.வி.க நகர் பேருந்து நிலையத்திற்கு அருகே கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதேபோல் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்களும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைக்கின்றனர்.

 CAA Signature Movement DMK party mk stalin CHENNAI

அதன்படி ஆவடியில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரியும், கும்பகோணத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணியும், சென்னை துறைமுகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பியும், விழுப்புரத்தில் கே.பாலகிருஷ்ணனும், பெரம்பலூரில் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தரும், நெய்வேலியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பியும், மதுரையில் ஜவாஹிருல்லா, சென்னை ராயபுரத்தில் தா.பாண்டியனும், தஞ்சை பாபநாசத்தில் காதர் மொய்தீனும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைக்கவுள்ளனர்.

Advertisment

 CAA Signature Movement DMK party mk stalin CHENNAI

இதனிடையே சிஏஏவுக்கு எதிரான திமுகவின் கையெழுத்து இயக்கத்தை தூத்துக்குடியில் மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.