குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி சென்னையில் நடைபெற்றது.

CAA SIGNATURE MOVEMENT IN DMK AND ALLIANCE PARTIES SEND OFF

அதன் தொடர்ச்சியாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, கடந்த 2- ஆம் தேதி சென்னை திரு.வி.க நகர் பேருந்து நிலையத்திற்கு அருகே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அதேபோல் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்களும் கையெழுத்து இயக்கத்தை அந்தந்த மாவட்டங்களில் தொடங்கி வைத்தனர்.

Advertisment

இந்த நிலையில் பெறப்பட்ட கையெழுத்து இயக்க படிவங்களை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் பெற்ற 2.05 கோடி கையெழுத்து இயக்க படிவங்கள் வரும் 19- ஆம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்படவுள்ளது.