Advertisment

சிஏஏ போராட்டம்- கண்காணிக்க ஆறு அதிகாரிகள் நியமனம்!

தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்க்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை கண்காணிக்க ஆறு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்குஎதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Advertisment

CAA ISSUS SPECIAL OFFICERS APPOINTED DGP TRIPATHY ORDER

இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடஙகளில் இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்க்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஐபிஎஸ் பொறுப்பில் உள்ள ஆறு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

CAA ISSUS SPECIAL OFFICERS APPOINTED DGP TRIPATHY ORDER

அதன்படி மதுரை மாவட்டத்துக்கு அபய்குமார் சிங், நெல்லை மாவட்டத்துக்கு மகேஷ் குமார் அகர்வால், முருகன், திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஜி.ஸ்டாலின், தேனி மாவட்டத்துக்கு பாஸ்கரன், தூத்துக்குடி மாவட்டத்துக்கு மகேந்திரன் ஆகியோர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆறு சிறப்பு அதிகாரிகளையும் சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி ஒருங்கிணைத்து செயல்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

peoples caa Tamilnadu SPECIAL OFFICERS dgp tripathy order
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe