Skip to main content

சென்னையில் சிறை நிரப்பும் போராட்டம்!- தீர்மானம் நிறைவேற்றிய தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழு! 

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

மதுரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  அக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  
 

1.NPR, NRC, CAA ஆகிய சட்டங்களுக்கு எதிராக  நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாட்டு மக்களின் மன நிலையைக் கவனத்தில் கொண்டு இச்சட்டங்களை  வாபஸ் பெற வேண்டும். அதுவரை  எங்கள் போராட்டம் தொடரும்.  இத்தகைய போரட்டத்தில் இருந்து நாங்கள் ஒரு அங்குலம் கூட பின் வாங்க மாட்டோம்.  


2.குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த பல மாநில முதல்வர்கள் இப்போது எதிர்த்து வருகிறார்கள். தம் மாநில மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் பாண்டிச்சேரி, பஞ்சாப், மத்திய பிரதேசம், கேரளா, ராஜஸ்தான்,தெலுங்கானா, மேற்கு வங்கம், உள்ளிட்ட மாநிலங்களில் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது போல  தமிழகத்திலும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

CAA ISSUES CHENNAI Thowheed Jamath ANNOUNCED


3.டில்லியில் அகிம்சை வழியில் போராடிய மக்கள் மீது வன்முறையாளர்களோடு காவல்துறையும் கைகோர்த்து செயல்பட்டததை வன்மையாகக் கண்டிக்கின்றோம். வன்முறையைக்கொண்டு அகிம்சை வழியில் போராடுபவர்களை  ஒடுக்க நினைப்பது ஜனனாயகத்தின் மீது தாக்குதல் நடத்துவதாகும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


4. பிப்ரவரி 29 அன்று நடைபெறும் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்களை பங்கெடுக்கச் செய்யவேண்டும் என மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.


5. CAA,NRC, NPR ஆகிய சட்டங்களை திரும்பப்பெற பல்வேறு போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகிறது. எங்கள் உரிமையை மீட்க சிறை செல்லவும் தயார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக வரும் மார்ச் 18-ம் தேதி தமிழகத்தின் மாவட்ட தலைநகரில் சிறை நிரப்பும் போரட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிக்கிறது.


இத்தீர்மானங்களை, மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுத்து, இஸ்லாமிய சமுதாயத்தினரின் போராட்டங்களுக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்பதை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழு அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.