குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாகையில் பிரம்மாண்ட பேரணி...!

நாகப்பட்டினத்தில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, குடியுரிமை சட்ட எதிர்ப்பு கூட்டியிக்கத்தின் சார்பில் பேரணி நடைப்பெற்றது. பேரணியில் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டனர். இந்த பேரணி புத்தாண்டின் முதல் நாளில் பலரையும் திரும்பி பார்க்கவைத்திருக்கிறது.

caa Against protest

பேரணி புத்தாண்டின் முதல்நாள் மாலை 4 மணிக்கு நாகை பழைய பேருந்து நிலையத்திலிருந்து, தேசிய கீதத்தோடு தொடங்கியது. பேரணியில் 650 அடி நீள இந்திய தேசிய கொடியை அனைவரும் சுமந்து முழக்கமிட்டு வந்தனர். பேரணியில் நாகையை சேர்ந்த பல்வேறு சமூக மக்களும் கலந்துக் கொண்டனர்.

 caa Against protest

புதிய பேருந்து நிலையத்தை அடைந்ததும், பேரணியின் ஒருங்கிணைப்பாளர் நிஜாமுதீன் அன்வரி தொடக்க உறையாற்றினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA பேசும்போது "பனாரஸ் இந்து பல்கலைக் கழக மாணவர்கள் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுவதை சுட்டிக்காட்டி பேசினார். மோடியும், அமித்ஷாவும் மக்களை மதத்தால் பிரிக்க நினைத்தனர். ஆனால் மக்கள் இந்தியர்களாக இணைந்து போராடுகிறார்கள் என்றார்.

caa protest
இதையும் படியுங்கள்
Subscribe