Skip to main content

இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய "சி-விஜில் ஆப்" !

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

17-வது மக்களவை தேர்தல் தேதிக்கான  அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா இ.ஆ.ப அவர்கள் நேற்று மாலை ( 10/03/2019) அறிவித்தார். இதில் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைப்பெறும் எனவும்  , தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனவும், இந்திய அளவில்  தமிழகத்தில் மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நடைப்பெறும் எனவும் தேர்தல் தேதி ( 18/04/2019) என அறிவித்தார். மேலும் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்ட வாக்குகள்  (23/05/2019) எண்ணப்படும் என அறிவித்தார்.

c-wizard app

மக்களவை தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி நடக்கும் அரசியல் கட்சிகள் வாக்களர்களுக்கு பணம் மற்றும் கிப்ட்பாக் (Giftpack) உள்ளிட்டவை கொடுத்தால் அரசியல் கட்சிகளின்  மீது "மக்கள் நேரடியாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு" எளிமையான முறையில்  புகார் அளிக்கும் வகையில் "மொபைல் ஆப்" (Mobile Application)  வசதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது . இந்த செயலி என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுபாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலியை பயன்படுத்தி மக்கள் புகார்  அளிக்கலாம். புகார் அளிக்கும் நபர்களின் ரகசியம் காக்கப்படும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.
 

இந்த செயலியை மக்கள் எவ்வாறு பயன்படுத்துவது?

கூகுல் பிளே ஸ்டோரில் "c-VIGIL" என டைப் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு தொலைபேசி எண்ணை பதிவிட வேண்டும். அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு குறுந்தகவல் வரும். இதில் ரகசிய குறியீட்டு எண் இடம்பெறும். இதை பதிவிட்ட பின் புகார் மனு அளிப்போர் பெயர் , தொலைபேசி எண்  , முகவரி  , தொகுதியின் பெயர் போன்றவை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதனை தொடர்ந்து "புகார் " சமந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எவையேனும் இருந்தால் பதிவேற்றம் செய்து புகாரின் வகையை தேர்வு செய்த பின் விவரிக்க வேண்டும். எந்த பகுதியில் குற்றம் நடக்கிறது என்பதை புகார் மனுதாரர் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

இதன் பிறகு "Acknowledgement No" புகார் அளித்த மனுதாரருக்கு வரும். புகார் மனு அளித்த 5 நிமிடத்தில் சமந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகள் புகார் மனுவில் குறிப்பிட்ட பகுதிக்கு செல்வர் . அவர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சமந்தப்பட்ட நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை  தொடர்பாக புகார் மனு அளித்தவருக்கு குறுந்தகவல்  அனுப்படும். மேலும் புகார் அளித்த மனுதாரருக்கு  100 நிமிடங்களுக்குள் எடுத்த நடவடிக்கை தொடர்பான முழு விவரத்தை அளிக்கும் வகையில் இந்த செயலி அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். மேலும் இந்த செயலியை (Log in) செய்த உடனேயே Mobile "GPS ON" ஆகும் வகையில் செயலியானது உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இளைஞரும் இந்த செயலியை அறிய வேண்டும். மேலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் "என் வாக்கு விற்பனைக்கு அல்ல"."என் வாக்கு என் உரிமை" என உறுதிமொழியை ஏற்போம் ! ஜனநாயகத்தை காப்போம் !


பி . சந்தோஷ் , சேலம் 

சார்ந்த செய்திகள்

Next Story

நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய என்.எஸ்.ஜி வீரர்கள்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
NSG soldiers landed in parliament by helicopter

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இறங்கி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து  அத்து மீறி சிலர் வண்ணத்தை உமிழும் பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனையடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு விமர்சனங்களையும் கருத்துகளையும் வைத்திருந்தனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக என்.எஸ்.ஜி வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் டெல்லி நாடாளுமன்றத்தின் வளாகத்திற்குள் இறங்கி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.