Advertisment

விபத்தில் சிக்கிய பெண்; முதலுதவி சிகிச்சை அளித்து முன்னாள் அமைச்சர்!

c vijayabaskar provides first aid to woman involved in accident

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி புதுப்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி. இவர் மகனுடன் இருசக்கர வாகனத்தில் இலுப்பூரில் இருந்து சொந்த ஊரான பிலிப்பட்டிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது தனது இருசக்கர வாகனத்தில் புடவை சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு சிறிது காயம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் அந்த வழியாக சைக்கிளில் சென்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவர்களை கண்டதும் 108 ஆம்புலன்ஸை அழைத்து முதலுதவி சிகிச்சை அளித்து இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த செயலை கண்ட பொதுமக்கள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை வெகுவாக பாராட்டினர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

trichy admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe