Advertisment

இடைத்தேர்தல் - தி.மு.க.வினர் சபதம் 

kalaignar

திருவாரூர் சட்டமன்ற இடைத்தோ்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சமர்பிக்க அனைவரும் ஒன்றினணந்து பாடுபடுவோம் என திருவாரூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உறுதி ஏற்றுக் கொண்டனர்.

Advertisment

திருவாரூர் சட்டமன்ற தொகுதி தோ்தல் பொறுப்பாளராகளாக திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன், முன்னாள் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோரை திமுக தலைமை கழகம் நியமித்துள்ளது.

Advertisment

இதனையடுத்து முன்னளர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தலைமையில் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய, நகர, ஊராட்சி, பேரூராட்சி செயலாளர்கள் பங்கேற்று இடைத்தோ்தலை சந்திப்பது குறித்து கருத்துகளையும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.

தொடர்ந்து மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் தோ்தல் பொறுப்பாளர்கள் பேசும் போது, திருவாரூர் சட்டமன்ற தொகுதி மறைந்த திமுக தலைவரை தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த தொகுதி, எனவே இடைத்தோ்தலை எந்த தயக்கமின்றி நோ்மையாக சந்தித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெற்றியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சமர்பிக்க பாடுபடுவோம்" என சபதமெடுத்தனர்.

kalaignar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe