Advertisment

''மார்ச்சுக்குள் முழு பயன்பாட்டுக்கு வந்துவிடும்'' - ஆய்வுக்குப் பின் அமைச்சர் சிவசங்கர் பேட்டி

nn

சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளை நிறுத்தி வைக்க அங்கு இடவசதி இல்லை என தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு வைத்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''ஆம்னி பேருந்துகளுக்கு இன்னும் பார்க்கிங் வசதி செய்ய வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை சிஎம்டிஏ நிர்வாகிகள் துரிதமாக எடுப்பார்கள். முடிச்சூரில் பார்க்கிங் வசதியானது மார்ச் மாத இறுதிக்குள் தயாராகிவிடும். அதுவரை பேருந்து நிலையத்தில் எதிர்ப்பக்கம் இருக்கக்கூடிய பார்க்கிங்கில் அவர்கள் நிறுத்துவதற்கான வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வசதிகளை பயன்படுத்தி பொதுமக்கள் பயணிப்பதற்கு எந்த இடையூறும் இல்லை என்ற நிலை உருவாகும். அதிலும் குறிப்பாக இன்றைக்கு ஆம்னி பேருந்துகளில் வந்த பயணிகள் கூடுதலாக எதிர்பாராமல் வந்திருந்தாலும் அவர்களை இங்கிருந்து நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு கூடுதலாக 200 நடை பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஏற்கெனவே நாங்கள் தெரிவித்தபடி கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. கிண்டிக்கு மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. தாம்பரத்திற்கு இரண்டு நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நேரடியாக பேருந்து பிடிக்க வேண்டும் என்று வருபவர்களுக்கோ அல்லது தாம்பரம் நேரடியாக செல்ல வேண்டும் என்பவர்களுக்கோ தாம்பரம் டூ கிளாம்பாக்கம் ஒன் டூ ஒன் பேருந்து இன்றிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

vck ad

அந்த பேருந்துகள் 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே பொதுமக்களுக்கான வசதி என்ன என்பதை ஆய்வு செய்து ஒவ்வொரு நாளும் கூடுதலாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த பேருந்து முனையம் என்பது முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வர தொடங்கி விட்டது. மற்ற போக்குவரத்துக் கழகங்களுடைய பேருந்துகள் விழுப்புரம், கும்பகோணம், சேலம் போன்ற போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் 30 ஆம் தேதியிலிருந்து கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்தில் 80 சதவிகித பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும். ஒரு 20% பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட இருக்கிறது'' என்றார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe