Advertisment

அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்!

நாகை மாவட்டத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, ஊராட்சி மன்றத் தலைவராகியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் ஒருவர்.

Advertisment

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடலங்குடி ஊராட்சி மன்றத் தலைவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரவையின் மாவட்ட தலைவர் ராஜ்மோகன் என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக, திமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஆறு வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

 By a high vote margin  candidate has win in nagai district

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கானவாக்கு எண்ணிக்கை நேற்று (02.01.2020) நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் இறுதிவரை ராஜ்மோகனுக்கே வாக்குகள் குவிந்து கொண்டிருந்தன. மொத்தம் 2734 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ராஜ்மோகன் 2101 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றார், அதிமுக சார்பில் போட்டியிட்ட சரவணன் 499 வாக்குகளும் மற்ற வேட்பாளர் இரட்டை இலக்க எண்ணுடன் கூடி வாக்குகளையே பெற்று தோல்வியடைந்தனர்.

Candidate high votes local body election Nagai district
இதையும் படியுங்கள்
Subscribe