Advertisment

இடைத்தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

Thiruvarur

Advertisment

திருவாரூர் தொகுதியில் வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்சியிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா லட்சுமி நாராயணபுரம், செருக்காமணி, மாவட்டக்குடி உள்ளிட்ட கிராம மக்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதிகளை எந்த ஆளும் கட்சியினரும் வந்து பார்க்கவில்லை, அரசியல் கட்சியினரும் வந்து பார்க்கவில்லை. எந்த எம்பி, எம்எல்ஏ தேர்தலாக இருந்தாலும் புறக்கணிக்க தயாராக இருக்கிறோம். புயலால் பயங்கர சேதம் ஆகியுள்ளது. இன்னும் மக்களுக்கு எந்த நிவாரணமும் வந்து சேரவில்லை. இந்த நேரத்தில் இடைத்தேர்தல் அறிவித்த பிறகு மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் இவ்வளவு சேதம் இருப்பது தெரிந்தும் ஏன் இடைத்தேர்தலை அறிவித்தார்கள் என்றனர்.

By election Thiruvarur
இதையும் படியுங்கள்
Subscribe