by-election; DMK, Naam Tamilar ​​filed nominations

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 10.01.2025 அன்று தொடங்கியது. இன்று (17/01/2025) வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும்.

by-election; DMK, Naam Tamilar ​​filed nominations

Advertisment

திமுக வேட்பாளர் ஏற்கனவே தேர்தல் பரப்புரையை தொடங்கி இருக்கும் நிலையில் இன்று திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்தனர். முன்னதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மா.கி.சீதாலட்சுமி மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார்.