
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் நாள் முதல் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு மாதமாக தினசரி தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 120 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றது. இந்த விலை உயர்வு சாமானிய மக்களை வெகுவாக பாதித்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சிறிய அளவில் குறைத்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 10 ரூபாயும் நாளை முதல் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக தோல்வி அடைந்த நிலையில் இந்த விலை குறைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.