ADVERTISEMENT

டிசம்பர் மாத இறுதிவரை இடைத்தேர்தல் தேதி அறிவிக்க கூடாது - தேர்தல் ஆனையத்திடம் பி.ஆர். பாண்டியன் வேண்டுகோள்

08:48 PM Oct 06, 2018 | selvakumar

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை உணர்ந்து திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தலை டிசம்பரில் தேர்தல் நடத்துவதையும் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதையும் ஒத்திவைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்பாளர் பி,ஆர்,பாண்டியன்.

ADVERTISEMENT

அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில், "வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20 ம் தேதி துவங்கி டிசம்பர் இறுதி வரை நீடிப்பது வழக்கம். இந்த ஆண்டு 20 தினங்களுக்கு முன்கூட்டியே அக்டோபர் 1ல் துவங்கி பலத்த மழைபெய்து வருகிறது. வழக்கத்தை விட 13 சதவிகிதம் கூடுதல் மழை பொழியும் என்றும் பெரும் பாதிப்புகள் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை காலங்களில் காவிரி டெல்டா மாவட்டங்கள் தொடர்பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம். இந்த காலகட்டத்தில் பெரும் பேரழிவு ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கும் பட்சத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடத்துவது பொருத்தமாக அமையாது. பேரிடர் காலமீட்பு நிவாரண பணிகளை மேற்கொள்வதில் மிகப்பெரும் பின்னடைவு ஏற்படும், நிவாரண பணிகள் முடங்கும் சூழல் ஏற்படும்.

ஒட்டு மொத்த தமிழக அரசு, மாவட்ட நிர்வாக செயல்பாடுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கவனம் முழுவதும் தேர்தல் பணிகளை நோக்கியே திருப்பப்படும், இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாக வேண்டிவரும்.

இந்த சூழலில் தேர்தல் ஆணையம் இன்று இடைத்தேர்தல் தேதி அறிவிக்க உள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. இதனை மறுபரிசீலினை செய்து திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களை டிசம்பர் இறுதி வரையில் நடத்தப்படுவதையும், அறிவிப்பதையும் நிறுத்தி வைத்திடவேண்டும்". என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT