திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தக்கோரிய வழக்கில் வரும் 28-ம் தேதி விசாரிக்கப்படுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இரு தினங்களுக்குமுன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயாரென தெரிவித்திருந்தார். இதனை மேற்கோள் காட்டி திருப்பரங்குன்றம், அரவக்குற்ச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கூடிய தேதியான ஏப்ரல் 18-ம் தேதியே இந்த தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக வழக்கு தொடர்ந்திருக்கிறது. இதை வரும் 28-ம் தேதி விசாரிக்கப்படுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.