வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. நாளுக்கு நாள் விலை குறையும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு விலை ஏற்றம் கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. வெங்காயத்தின் விலை இப்படி உயரும் நிலையில், வெங்காயத்தை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதில் பாதி கூட கிடைப்பதில்லை.

Advertisment

உணவில் அத்தியாவசிய தேவையாக வெங்காயம் உள்ளது. விலை ஏறத் தொடங்கியதால் உணவு விடுதிகளில் வெங்காய சட்னி, தயிர் வெங்காயம், ஆம்லெட்டுக்கு வெங்காயம் இல்லை. வெங்காயத்திற்கு பதில் முட்டைக்கோஸ் என்று மாற்றிக் கொண்டனர்.

Advertisment

buy smart phone get one kg onion thanjavur district pattukkottai mobile shop

இந்த நிலையில் தான் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஒரு செல்போன் கடையில் தனது வாடிக்கையாளர்களுக்கு செல்போன் வாங்கினால் ஹெட்போன், மெமரிக் கார்டு இலவசமாக கொடுத்து வந்த நிலையில், தனது வாடிக்கையாளர்கள் வெங்காயம் வாங்க கடை கடையாக அலையக்கூடாது என்பதற்காகவும், விற்பனையை அதிகரிக்கும் விதமாகவும், ஒரு செல்போன் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று செல்போன் கடையின் உரிமையாளர் பதாகை வைத்தார்.

இதனால் கடந்த நாட்களை விட கூடுதல் வாடிக்கையாளர்கள் அந்த செல்போன் கடைக்கு வரத் தொடங்கியுள்ளனர். வெங்காயத்தை வைத்தே தனது செல்போன் கடைக்கு இலவச விளம்பரத்தையும் செய்து கொண்டார்கள். சாதாரண விலைக்கு வெங்காயம் கிடைக்கும் வரை இந்த இலவசம் தொடரும் என்கிறார்கள்.

Advertisment